blog-post-image

பித்தப்பை

Posted on 2023-07-27 02:29:10 by Sathish

பித்தப்பை

பித்தப்பை என்பது வயிற்றின் வலது பக்கம் மேல் பகுதியில் வலது புற கல்லீரலில் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு உறுப்பு ஆகும். இந்த உறுப்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 30 முதல் 50 மில்லி பித்தத்தை சேமித்து வைக்கின்றது இந்த உறுப்பின் மிக முக்கியமான வேலை என்னவென்றால் கொழுப்புச்சத்து மிகுந்த உணவுக்கு பிறகு பித்த நீரை முன் சிறு குடலுக்கு வெளியேற்றுகின்றது. இந்த பித்தப்பை தான் பித்தப்பை கல் உருவாகும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான நோய் பாதிப்புகளான பித்தப்பை கற்கள் பித்தப்பையை பாதித்தால் பித்தப்பை அகற்றுதல் தேவைப்படலாம். பித்தப்பை அகற்றிய பிறகும் மனிதன் சாதாரணமான உணவு பழக்கத்துடன் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வயிற்றின் வலது பக்கம் அமைந்திருக்கும் இந்த பித்தப்பை ஒரு சிறிய பேரிக்காய் வடிவ பை போன்ற உறுப்பாகும். இந்த பித்தப்பை, வலது புற கல்லீரலின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும், பித்தப்பையின் ஒரு குறிப்பிட்ட பகுதி கல்லீரலால் மூடப்பட்டிருக்கும் சில நேரங்களில் பித்தப்பை என்னும் உறுப்பின் மூலமாக கல்லீரலின் அடிப்பகுதியில் இருந்து தொங்குகின்றது, பித்தப்பையையும் கல்லீரலின் ஒரு பகுதியையும் இணைக்கும் பகுதி பித்தப்பை ஃபோஷா என்று அழைக்கப்படுகின்றது.

கல்லீரலில் இருந்து உருவாகும் பித்தநீரை முன் சிறு குடலுக்கு எடுத்துச் செல்வது பித்த குழாய் ஆகும். பித்தப்பை ஆனது பித்த குழாயின் வலது பக்கம் இணைக்கப்பட்டிருக்கும் வலது புற மற்றும் இடது புற கல்லீரலில் இருந்து வரும் பித்த குழாய்கள் இணைந்து மேல் பொது பித்த குழாயை உருவாக்குகின்றன. இந்த மேல் பொது பித்தக் குழாயுடன் பித்தப்பையின் சிஸ்டிக் குழாய் இணைந்து கீழ் பொது பித்தக் குழாய் உருவாகி அது கணைய குழாயுடன் இணைந்து முன் சிறு குடலின் பொதுப் புள்ளியில் திறக்கின்றது. பித்தப்பையில் தேங்கி இருக்கும், பித்த நீர் சிஸ்ட்டிக் குழாய் என்னும் பித்தப்பை குழாய் வழியாக பித்தக் குழாயை அடைந்து பின் முன் சிறு குடலை அடைகின்றன. பித்தப்பைக்கு ஃபண்டஸ் என்னும் தலைப்பகுதி உடல் பகுதி ஹார்மோனின் பையுடன் கூடிய இன்பன்டிபுலம் மற்றும் பித்தப்பை குழாய் போன்ற பகுதிகள் உள்ளன. ஹார்மோனின் பை என்பது பித்தப்பை குழாய்க்கும் பித்தப்பையின் உடற்பகுதிக்கும் இடையில் இருக்கும் ஒரு பகுதியாகும். இது வலது கல்லீரலில் குழாயுடன் நெருக்கத்தில் இருப்பதால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது சில சமயங்களில் வலது கல்லீரலில் பித்த குழாயில் பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக பித்தப்பை குழாய் பித்தக் குழாயுடன் செங்குத்தாக இணைகிறது. ஆனால் சில சமயங்களில் பித்தப்பை குழாய் பித்தப்பையுடன் இடது பக்கமோ அல்லது சாய்வாகவோ, அல்லது முன் புறமோ அல்லது பித்த குழாயின் கீழ் பகுதியிலோ இணையலாம்.

சில சமயம் வலது மற்றும் இடது கல்லீரலில் பித்த குழாய்கள் சங்கமிக்கும் இடத்தில் கூட இணையலாம். பித்தப்பை குழாய் பித்த குழாய் இணையும் இடத்தின், மேற்பகுதியை மேல் பொது பித்தக் குழாய் என்றும் பித்த குழாய் செருக்களுக்கு கீழே உள்ள பித்த குழாயை, கீழ் பொது பித்தக் குழாய் என்று அழைக்கிறோம். பித்தப்பை குழாயின் நீளம் சுமார் 1 முதல் 5 சென்டிமீட்டர் ஆகும். பித்தப்பை குழாயில் ஹெய்ஸ்டர் என்னும் சுழல் மீது சவ்வுகள் உள்ளன. பொதுவாக பித்த குழாயை முன் சிறு குடலுக்கு மேற்பகுதி முன் சிறு குடலுக்கு பின்பகுதி, மற்றும் கணையத்தின் உட்பகுதி என மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். பொதுவாக பித்த நாளத்தின் உள்கணைய பகுதியானது, ஓடியின் ஸ்பிங்கடர் எனப்படும், வால்வால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாக, பித்தக் குழாயின் கீழ் பகுதி பிரதான கணையக் குழாயுடன் இணைந்து வாட்டரின் ஆம்பூலா எனப்படும், முன் சிறு குடலின் இரண்டாம் பகுதியில் உள்ள பொதுப் புள்ளியில் திறக்கிறது.

கலோட்டின் முக்கோணம்

கலோட்டின் முக்கோணம் என்பது, பித்தப்பை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அமைப்பாகும். இந்த முக்கோணத்தை கல்லீரலின் அடிப்பகுதி ஒரு பக்கத்தையும் பித்தப்பை குழாய் கீழ் பக்கத்தையும் மேல் பொது பித்தக் குழாய் இன்னொரு பக்கத்தையும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த முக்கோணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பித்தப்பைக்கு ரத்தம் வழங்கும் பித்தப்பை தமனி வலது கல்லீரல் தமனியில் இருந்து உருவாகி இந்த முக்கோணத்தின் வழியாக பித்தப்பையை அடைகின்றன. முக்கியமாக பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை தமனியை கட்டுப்படுத்தும் போது, வலது கல்லீரலில் தமனி காயமடையும் அபாயம் உள்ளது. கலோட்டின் நிணநீர் முடிச்சு எனப்படும் “லுன்டு” எனப்படும் முடிச்சு இந்த முக்கோணத்தில் பித்தப்பை தமனியின் மேல் அமர்ந்திருக்கும் இந்த நிணநீர் முடிச்சுக்கு மூன்று முக்கியத்துவங்கள் உள்ளன, இந்த நிணநீர் முடிச்சின் அடியில் பித்தப்பை தமனி உள்ளது பித்தப்பையில் அலர்ஜி ஏற்பட்டால் இந்த நிணநீர் முடிச்சின் அளவு பெரிதாகின்றது. மேலும், பித்தப்பையில் ஏற்படும் புற்று வியாதியின் போதும் இந்த நிணநீர் முடிச்சின் அளவு பெரிதாகிவிடும்.

பித்த சுரப்பு

பித்தநீரானது கல்லீரலின் ஹெபடோ சைடுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. பித்த நீரின் உற்பத்தி பித்தப்பையால் அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். உடலில் உள்ள பித்த நீருக்கு இரண்டு முக்கிய பாத்திரங்கள் உள்ளன. முதலாவதாக உடலில் நடக்கும் வளர்ச்சிதை மாற்றங்களால் மிஞ்சும் நச்சுப் பொருள்கள் ரத்தத்தில் கலந்து அவை கல்லீரலால் பித்த நீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே பித்த நீர் உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும் முக்கிய வேலையை செய்கின்றது. இரண்டாவதாக உணவில் உள்ள பெரும்பாலான கொழுப்புச் சத்துக்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உட் கிரகிப்பதில் பித்த நீரில் உள்ள பித்த உப்புக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பித்த நீர் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள்  உட் கிரகிப்புகளை அதிகரிப்பதால் வைட்டமின் ஏ, டி , , மற்றும் கே போன்ற கொழுப்புகளில் கரையும் வைட்டமின்கள் உட்கிரகிக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. பித்த நீரானது அதன் உணவு செரிமான செயல்பாடு தவிர பித்தமானது ஹீமோகுளோபின் மற்றும் மையோ குளோபின் சிதைவு பொருளான,

“பிலிரூபினை” வெளியேற்ற உதவுகின்றது பிலிரூபின் மற்றும் அது சார்ந்த நிறமிகள் ரத்தத்தில் உள்ள “ஆல்பமின்னுடன்” இணைக்கப்பட்டு ரத்தத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. இதை மறைமுக பிலுரூபின் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மறைமுக பிலுரூபின் கல்லீரலின் எப்பட்டோசைட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு எப்பட்டோசைட்டுகளால், குளுக்கோ ரோனைடுகளுடன் இணைந்து பிலுரூபின் குளுக்கோரோனைடுகளை உருவாக்குகின்றன. இதை நேரடி பிலுரூபின் என்று அழைக்கப்படுகிறது.

பித்தப்பை என்பது கல்லீரலின் வெளிப்புறம் உள்ள பித்தநீரை சேமிக்கும் ஒரு பை போன்ற உறுப்பாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுமார் “30 முதல் 50” மில்லி பித்தம் தேங்கி இருக்கும். இந்த தேங்கியிருக்கும், பித்த நீர் உணவுக்கு பின் குறிப்பாக கொழுப்பு சத்து மிகுந்த உணவுக்கு பின், பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையால் பித்த குழாய் வழியாக முன் சிறு குடலுக்கு வெளியேற்றப்படுகின்றது. பித்தப்பையில் தேங்கி இருக்கும் பித்த நீர் உணவின் தரத்தை பொறுத்து வெளியேற்றப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.

பித்தநீரில் உள்ள பிலிரூபின் என்னும் நிறமி இரத்த சிவப்பணுக்களின் சிதைவினால் உற்பத்தியாகின்றன. பித்த நீரில் பிலுரூபின் உடன் பித்த அமிலங்கள் பித்த உப்புக்கள் பாஸ்போலிப்டுகள் கொலஸ்ட்ரால் மற்றும் மின் அயனிகளுடன் நீரும் உள்ளது. கோலிக் அமிலம் மற்றும் டிஅக்ஷா கோலிக் அமிலம் என்பவை பித்த நீரில் இருக்கும் பித்த அமிலங்கள் ஆகும். கல்லீரலில் இருக்கும் ஹைபோடோசைட் எனும் உயிரணுக்கள் கொலஸ்ட்ராலில் இருந்து இந்த பித்த அமிலங்களை உருவாக்கி கல்லீரலில் உள்ளிருக்கும் பித்த நாளங்களுக்கு அனுப்புகின்றன. பொதுவாக கல்லீரலில் உருவாகும், பித்த உப்புக்களின் அளவு மிகக் குறைவே, கல்லீரலில் உருவாகும் பித்த உப்புக்கள் பித்த நீருடன் கலந்து பித்த குழாய் வழியாக முன் சிறு குடலை அடைகின்றன. இந்த பித்த உப்புக்கள், சிறு குடலினுள் சென்று கொழுப்புச் சத்து மிகுந்த உணவினை ஜீரணிக்க உதவுகின்றன. உணவில் இருக்கும் கொழுப்புச்சத்து மற்றும் வைட்டமின் டி கே உடன் பித்த உப்புக்களும் உட்கிரகிக்கப்படுகின்றன. இவ்வாறு உட்கிரகிக்கப்பட்ட பித்த உப்புக்கல் ஆல்புமின் என்ற புரதத்துடன் சேர்ந்து கல்லீரலை அடைகின்றன. இந்நிகழ்வை என்ட்ரோஹபாட்டி சுழற்சி என அழைக்கப்படுகின்றன. எனவே 5சதவீதத்திற்கும் குறைவான பித்த உப்புக்களை மலத்துடன் வெளியேறுகின்றன. இந்த என்ட்ரோஹபாட்டிற்கும் சுழற்சி நிகழ்வினால் பெரும்பாலான பித்த உப்புக்கள் சேமிக்கப்படுகின்றன. இதனால் கொழுப்பு சத்துக்களை உட் கிரகிக்கும் வேலை மிக இதமாக நடைபெறுகின்றன. உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் ஒரு பகுதி பித்த நீராக வெளியேற்றப்படுகின்றன பொதுவாக பித்த நீர் காரத்தன்மை கொண்டதாகும்.

கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரும் பித்தநீர் ஓட்டத்தின் ஒரு பகுதியும் தன்னிச்சையாக நடக்கும் நிகழ்வு ஆகும். ஆனால், நரம்புகளின் தூண்டுதல் இயக்கு நீரின் ஆதிக்கம் மற்றும் உணவில் உள்ள பொருள்கள் குறிப்பாக கொழுப்பு சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் பித்த நீர் உற்பத்தியும் பித்த நீர் ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகின்றன. ஜீரண மண்டலத்தில் உள்ள ஹார்மோன்களும் வேகஹஸ் என்னும் நரம்பின் தூண்டுதலும், அதிக பித்த நீர் உற்பத்தியும் பித்த நீர் ஓட்டத்தையும் சீரமைக்கின்றன. சிறு குடலில் இருக்கும் சீதமென் சவ்வு கோலிசிஸ்டிக்டோக்கனின் என்னும் ஹார்மோன் பித்தநீர் உற்பத்தியை அதிகரிப்பதோடு பித்தப்பையையும் சுருங்கி விரிய வைக்கின்றது. எனவே கோலிசிஸ்டோகனின் என்னும் ஹார்மோன் அதிக அளவில் பித்த நீர் முன் சிறு குடலுக்கு வருவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. கோலிசிஸ்டோகன் ஹார்மோனால் உருவாகும் பித்தப்பை சுருங்கி விரியும் தன்மையால் பித்தப்பையினுள் அதிக அழுத்தம் உருவாகின்றது. பித்தப்பையின் வாய்பகுதியில் பித்தப்பை கற்கள் அடைக்கும் போது கோலிசிஸ்டோகனின் ஹார்மோனால் உருவாகும் பித்தப்பை உள்ள அழுத்தம் சுமார் 300 மில்லி மீட்டர் மெர்குரியை அடையும் வேகஹஸ் நரம்பு தூண்டப்படுவதாலும் இதே போன்ற மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் பித்தப்பை சுருங்கி விரியும் தன்னை சற்று குறைவாகவே இருக்கும் கோலிசிஸ்டோகனின் என்ற ஹார்மோன் பித்தப்பையை சுருங்கி விரிய வைப்பதோடு பித்தக் குழாய் முன் சிறு குடலை அடையும் இடத்தில் இருக்கும், ஓடியின் வாழ்வு பகுதியை தளர்த்துகின்றது. இந்த பித்தப்பை சுருங்கி விரியும் தன்மையோடு ஒடியின் வாழ்வு தளரும் தன்மையும் ஒருங்கிணைந்து நடைபெறுவதால் கோலிசிஸ்டோகனின் உற்பத்தியாகும் இரண்டு மணி நேரத்திற்குள் பித்தப்பையில் இருக்கும் சுமார் 70% பித்த நீரை வெளியேற்றுகின்றது. பித்த குழாய் முன் சிறு குடலை அடையும் இடத்தில் முன் சிறு குடலின் சுவர் வழியாக சாய்வாக செல்கின்றது. இந்த சாய்ந்த பாதை மற்றும் ஓடியின் வாழ்வு செயல்பாடுகள் உணவு உண்ணாமல் இருக்கும்போது பித்த நீர் முன் சிறு குடலுக்குள் செல்லுவதை தடுக்கின்றது. பொதுவாக செயலிழந்த பித்தப்பை மற்றும் பித்தப்பையில் வரும் நுண்ணுயிரின் தாக்கங்கள் பித்தப்பையில் கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் பித்தப்பையில் கற்கள் இருந்தால் பித்தப்பை செயலிழந்து விட்டன என கருதப்படுவதால் பித்தப்பை கல் பாதிக்கப்பட்டவருக்கு பித்தப்பை கல் அகற்று அறுவை சிகிச்சை தேவை என கருதப்படுகின்றது.

சில சமயங்களில் சிறு குடலில் ஏற்படும் நோயால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சிறு குடல் அகற்றப்பட்டாலோ, அல்லது சில குறிப்பிட்ட வியாதிகளால் சிறுகுடலின் சீதமென் சவ்வு அதிகமாக பாதிக்கப்பட்டாலும் பித்த உப்புக்களின் உட் கிரகிப்பு குறையலாம். இவ்வாறு பித்த உப்பின் உட்கிரகிப்பு குறையும் தருணத்தில் கொழுப்பு சத்து மிகுந்த உணவை உட்க்கிரகிக்கும் தன்மை குறைவதோடு கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் உட் கிரகிப்பும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் உடலுக்கு தேவைப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

பித்தப்பை கல்

பித்தப்பை கல் என்பது பித்தப்பையில் உருவாகும் ஒரு அசாதாரணமான திடப்பொருள் ஆகும். இது மனிதனின் எந்த வயதிலும் உருவாகலாம், மேலும் இந்த நோயின் வெளிப்பாடு எந்த வயதிலும் தோன்றலாம். பித்தப்பையில் கல் உருவான உடனேயே பித்தப்பை கல்லின் வெளிப்பாடு தோன்ற அவசியமில்லை, பித்தப்பை கல் உருவாக்கத்திற்கும் நோயின் வெளிப்பாட்டிற்கும் உள்ள இடைவெளி சரியாக குறிப்பிட முடிவதில்லை.

பொதுவாக நோயாளியின் நோய் அறிகுறிகளை பித்தப்பையில் கல் இருப்பதை உணர்த்துகின்றன. நோயாளியின் நோய் அறிகுறிகள் பித்தப்பை கல் தொடர்புடையதாக இருந்தால் அல்ட்ரா சோனோகிராபி என்னும் ஸ்கேன் பரிசோதனை மூலம் பித்தப்பையில் கற்கள் இருக்கின்றதா அல்லது இல்லையா என கண்டறியப்படுகின்றன.

ஸ்கேன் பரிசோதனையின் போது பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அப்போதைய நோயாளியின் பொதுவான உடல்நிலை கண்டறியப்பட வேண்டும். அத்துடன், பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட மற்ற சிக்கல்கள் குறிப்பாக பித்தக் குழாய்கள் மற்றும் கணைய அலர்ஜி இருக்கின்றத என கண்டறிதல் மிக முக்கியம். ஏனெனில், பித்தப்பை கல் சம்பந்தப்பட்ட வேறு சிக்கல்கள் இருந்தால் பொதுவாக அவைகள் சரி செய்ய பட்டு பின் பித்தப்பை கல்லுக்கான பித்தப்பை அகற்றுதல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.

பித்தப்பை கற்கள் ஏற்படும் வயது பித்தப்பையில் பித்தப்பை கற்கள் எந்த வயதிலும் உருவாகலாம். ஆனால் பொதுவாக 30 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக கல் உருவாகி நீண்ட காலங்கள் கல்லின் வெளிப்பாடு தோன்றாமல் இருக்கலாம், சில சமயங்களில் வயிற்றிற்கு செய்யப்படும் “அல்ட்ரோசோனோகிராபி”  என்ற ஸ்கேன் பரிசோதனையின் மூலம் பித்தப்பை கற்கள் தற்செயலாக கண்டறியப்படுகின்றன. இன்னும் சில சமயங்களில் பித்தப்பை கற்களின் சிக்கலான மஞ்சள் காமாலை அல்லது கணைய அழற்சி போன்றவையே பித்தப்பை கல்லின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.

பித்தப்பை கற்கள் ஆண் பெண் விகிதம்

பித்தப்பை கற்களை பொறுத்த வகையில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகின்றனர். மதிப்பிடப்பட்ட ஆண் பெண் விகிதம் 1:3 ஆகும்.

பித்தப்பை கற்கள் உருவாகுவதற்கான காரணங்கள்

பித்தப்பை கற்கள் உருவாகுவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை சொல்லி விட முடியாது, பித்தப்பை கல் உருவாக பல காரணங்களை சொல்லலாம் குறிப்பாக பித்தப்பையில் உள்ள பித்த நீரில் ஏற்படும் மாறுதல்கள் முக்கியமாக கொலஸ்ட்ரால் மற்றும் பிலிரூபின் போன்ற பொருட்களின் விகித மாறுதல்கள் பித்தப்பையில் கல் உருவாக காரணமாகின்றன. மற்றும், பித்தப்பையின் அசைவில் ஏற்படும் மாற்றங்களும் பித்தப்பையில் கல் உருவாக ஒரு காரணமாக அமைகின்றது. பெண்களை பொறுத்தவரை உடலில் தொடர்ந்து நடைபெறும் ஹார்மோன்களின் மாற்றத்தால் கூட பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். மேலும், பித்தப்பையில் பித்தப்பை கல் உருவாக மிக முக்கியமான காரணம் பித்தப்பையில் ஏற்படும் தொடர் அலர்ஜியாகும். இந்த தொடர் அலர்ஜிக்கு மிக முக்கியமான காரணம் டைபாய்டு எனும் நுண்ணுயிரி ஆகும்.

பித்தப்பை கல் உருவாக முக்கியமான காரணங்கள்:

A)பித்த நீரில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது

பித்தநீரில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் பித்தப்பையில் மஞ்சள் நிற கற்கள் உருவாக காரணமாகின்றது. கல்லீரல் அதிகப்படியான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்தால் உற்பத்தி செய்யப்பட்ட கொலஸ்ட்ரால் பித்தநீரில் கலந்து இருக்கின்றன. அதிகப்படியாக கொலஸ்ட்ரால் உற்பத்தியாகும் போது பித்த நீரில் இருக்கும் பித்த உப்புக்கள் பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ராலை கரைப்பதற்கு போதுமானதாக இல்லாததால் மீதி இருக்கும் கொலஸ்ட்ரால் பித்தப்பையில் மஞ்சள் நிற கொலஸ்ட்ரால் கற்களாக மாறுகின்றன. இந்தியாவில் வெறும் கொலஸ்ட்ராலினால் உருவாகும் கற்களின் விகிதம் மிகக் குறைவே பொதுவாக கொலஸ்ட்ரால் பித்தப்பை கற்களுடன் பிலிரூபின் நிறமிகளும் சேர்ந்து காணப்படுகின்றன. கொலஸ்ட்ரால் கற்கள் மஞ்சள் நிறமாகவும் கொலஸ்ட்ராலுடன் பிலிரூபின் சேர்ந்த கற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்து பழுப்பு நிறம் வரை காணப்படுகின்றன.

B)பித்தநீரில் அதிக பிலிரூபின் இருப்பது

பிலிரூபின் என்ற நிறமி உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் மற்றும் மையோ குளோபின் சிதைவுகளால் உற்பத்தியாகின்றன. ரத்த சிதைவு மஞ்சள் காமாலை தொடர் கல்லீரல் அலர்ஜி போன்ற வியாதிகளால் பிலிரூபின் உற்பத்தி அதிகமாகின்றது. இவ்வாறு உருவாகும் பிலிரூபின் பித்த நீர் வழியாக வெளியேறுவதால் பிலிரூபனின் உற்பத்தி அதிகமாகும் போது பித்த நீரில் இருக்கும் பிலிபினின் அளவும் அதிகமாகின்றன. இச்சமயத்தில், பிலிரூபின் அடங்கிய நிறமி கற்கள் உருவாகின்றன. இந்த நிறமி கற்களில் உள்ள நிறமிகளின் அளவை பொறுத்து அதன் நிறம் மாறுபடுகின்றன. குறிப்பாக முழுவதும் பிலிரூபின் நிறமியால் ஆன கல் கருப்பாகவும் பிலிறும்பினோடு கொலஸ்ட்ரால் சேர்ந்த கற்களின் நிறம் பழுப்பு நிறமாகவோ காணப்படுகின்றன கருப்பு நிற கற்கள் கடினமானதாகவும் பழுப்பு நிற கற்கள் மென்மையானதாகவும் இருக்கும்.

C)பித்தப்பையில் பித்த நீர் தேக்கம்

பொதுவாக உணவு உண்டபின் முன் சிறு குடலில் இருக்கும் சீரமென் சவ்வு கோலிசிஸ்டோக்கன் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன் தான் பித்தப்பையை சுருங்கி விரிய வைத்து பித்தப்பையில் இருக்கும் பித்தநீரை வெளியேற்ற மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. ஏதோ ஒரு காரணத்தினால், பித்தப்பையின் பித்தம் வெளியேற்றும் திறன் குறைந்து விட்டால் பித்த நீர் பித்தப்பையில் தேங்குகின்றது. இவ்வாறு தொடர்ந்து தேங்கும் பித்த நீர் பித்தப்பையில் கல் உருவாக காரணமாகின்றது. பெண்களை பொறுத்தவரை தொடர்ந்து ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களால் குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஸ்டோஜன் மாற்றங்களால் பித்தப்பையில் அசைவும் மாறுபடுகின்றது. இந்த பித்தப்பை அசைவு மாற்றம் பித்தப்பையில் கற்கள் உருவாக ஒரு காரணமாக அமையலாம். பொதுவாக பித்தப்பை ஆரோக்கியத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பித்தப்பை சுருங்கி விரிவது நல்லது இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் பித்தப்பை சுருங்கி பிரியாத தருணத்தில் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. இன்னும் குறிப்பாக வயிற்றின் மேற்பகுதியில் செய்யப்படும் சில அறுவை சிகிச்சைக்கு பின்பு பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மை மாறலாம் குறிப்பாக முக்கிய அறுவை சிகிச்சை வயிற்று புண்ணுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும் இந்த அறுவை சிகிச்சையில் உடலில் இருக்கும் இரண்டு வேகஸ் நரம்புகளும் துண்டிக்கப்படுகின்றது. இதனால் பித்தப்பைக்கு வரும் நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையும் குறைந்து பித்தப்பையில் கற்கள் உருவாக ஒரு காரணமாக அமைகின்றன.

D)ஈஸ்ட்ரோஜன் மற்றும் பித்தப்பை கற்கள்

 உடலில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியானால் அது அதிக கொலஸ்ட்ரால் உற்பத்தியாவதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. இவ்வாறு உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் பித்தநீரில் உள்ள பித்த உப்புக்களால் நடுநிலை யாக்கப்படுகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாக இருந்தால் அதை பித்த உப்புகளால் நடுநிலை படுத்த முடியாமல் போகலாம் இத்தருணத்தில் இஞ்சி இருக்கும் பித்த நீர் கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் கற்களாக பித்தப்பையில் உருவாகின்றது இக்கற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

E)பித்தப்பையின் தொடர் நுண்ணுயிரியின் தாக்கம்

பித்தப்பையில் இருக்கும் தொடர் நுண்ணுயிரி தாக்கம் பித்தப்பையில் கற்கள் உருவாக ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக டைபாய்டு வியாதியை உருவாக்கும் பாக்டீரியா சால்மோ நல்லா டைபை என்னும் பாக்டீரியா மிக முக்கியமானதாகும் டைபாய்டு அல்லது குடல் காய்ச்சல் என்பது மனிதனின் குடலை தாக்கும் ஒருவித நோயாகும் டைபாய்டு நோயை உருவாக்குவது சால்மோநல்லாடைபை என்னும் நுண்ணுயிரி ஆகும். பொதுவாக டைபாய்டு நோய் ஆனது உண்ணும் உணவு வழியாகவோ அல்லது குடிக்கும் நீர் வழியாகவோ பரவுகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று வலி வரலாம். சில சமயங்களில், மஞ்சள் காமாலை கூட வரலாம். இந்த நோய் தெற்கு மத்திய ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாக காணப்படுகின்றன. சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகம் இருந்தால் குடலில் புண் ஏற்பட்டு குடலில் ஓட்டை கூட வரலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த டைபாய்டு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவ்வாறு இருப்பின் இந்த பாக்டீரியா ரத்தத்தில் கலந்து செப்டி சீமியா என்னும் ஒரு பெரு விளைவை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தான நிலை வரலாம் டைபாய்டு பாக்டீரியா சரியாக பாதுகாக்கப்படாத அல்லது சுத்தமற்ற உணவு பொருட்களை உண்பதாலோ அல்லது சுத்தமற்ற நீரை பருகுவதாலோ பரவுகின்றது. இவ்வாறு உணவு வழியாக பரவும் பாக்டீரியா சிறுகுடலை அடைகின்றது.அங்கு சிறுகுடலின் மென் சவ்வு வழியாக நுழைந்து ரத்தத்தில் கலக்கின்றன. இவ்வாறு ரத்தத்தில் கலந்த பாக்டீரியா பெருகி டைபாய்டு நோயை உருவாக்குகின்றன. பொதுவாக சிறுகுடல் கல்லீரல் எலும்பின் உட்பகுதி மற்றும் பித்தப்பை போன்ற உறுப்புகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. டைபாய்டு பாக்டீரியா கல்லீரலையும் சிறு குடலையும் இணைக்கும் பித்த குழாய்கள் வழியாகவோ ரத்தக்குழாய்களின் வழியாகவோ பித்தப்பையை அடைகின்றன. இந்த நோய் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் உரிய சிகிச்சை முறைகள் நோயிலிருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும் சில சமயங்களில் குறிப்பாக 3.5 சதவிகிதம் நபர்களில் இந்த பாக்டீரியா பித்தப்பையை தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்குகின்றது. இது பின் நாள்பட்ட தொற்றாக மாறுகின்றது டைபாய்டு பாக்டீரியா மனிதனை மட்டுமே பாதிக்கும் நுண்ணுயிரியாகும் தொடர் அலர்சியால் பாதிக்கப்படும் போது குறிப்பாக பித்தப்பையில் இருக்கும் பாக்டீரியா பாதிக்கப்பட்டவரின் மலம் வழியாகவும் ரத்தத்தில் இருக்கும் பாக்டீரியா பாதிக்கப்பட்டவரின் சிறுநீர் வழியாகவும் பரவுகின்றது. சில சமயங்களில் இந்த நாள்பட்ட பாக்டீரியா பல வருடங்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் குறிப்பாக டைபாய்டு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 25 சதவீதம் நபர்கள் நோயாளியின் கடுமையான தாக்கத்திற்கு ஆளாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டைபாய்டு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் நடத்தப்பட்ட தொற்றுநோய் ஆய்வுகள் இந்த தொற்று நோய்க்கும் பித்தப்பை கற்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக நாள்பட்ட டைபாய்டு தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்ட 90% நபர்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரபியல் காரணிகள்

பித்தப்பை கற்கள் ஒரே குடும்பத்தை சார்ந்த ரத்தம் தொடர்புடையவர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக அம்மா, மகள், அப்பா, மகன், அக்கா, தங்கை போன்றவர்களிடம் காணப்படுவதோடு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக பித்தப்பை கற்கள் காணப்படுகின்றன. பித்தப்பை கல் நோய்க்கு மரபணு சம்பந்தம் இருக்கலாம் என்று சொல்வதற்கு இதுவே சான்று.

பித்தப்பை கல் உருவாகவதற்கான பொது காரணிகள் பித்தப்பை கற்கள் உருவாவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் இருந்தாலும் கீழே கூறப்படும் காரணங்கள் கல் உருவாவதை அதிகப்படுத்துகின்றன.

1) பெண்ணாக இருப்பது

2) உடல் பருமன் அதிகமாக இருப்பது

3) சரீர உழைப்பில்லாத நிலை

4) கர்ப்பமாக இருப்பது

5) உணவில் அதிகமாக கொழுப்பு சேர்ப்பது

6) அதிக கொலஸ்ட்ரால் உணவை உண்ணுதல்

7) நார்ச்சத்து குறைந்த உணவை உண்ணுதல்

8) குடும்பத்தில் பித்தப்பை கற்கள் பாதிப்பு இருப்பது

9) சர்க்கரை நோய் இருப்பது

10) மிக விரைவாக எடை குறைதல்

11) கல்லீரல் நோய் இருப்பது குறிப்பாக கல்லீரல் சுருக்கம்

பித்தநீர் பாதையில் நுண்ணுயிரியல்

பொதுவாக பித்த குழாயில் இருக்கும் பித்த நீரில் நுண்ணுயிரிகளை பார்க்க முடிவதில்லை ஆனால், பித்தப்பையில் இருக்கும் கல் அல்லது பித்த குழாயை அடைக்கும் கல்லால் நுண்ணுயிரின் தாக்கம் ஏற்படலாம். பித்த குழாயில் இருக்கும் பெரும்பாலான பாக்டீரியா கிராம் நெகட்டிவ் ஏரோப்ஸ் என்னும் பிரிவை சார்ந்தவை ஆகும். பொதுவாக பித்தக் குழாயில் இருக்கும் நுண்ணுயிரி முன் சிறு குடலில் இருந்து மேலே செல்வதாகும் சில சமயங்களில், ரத்தத்தில் இருக்கும் நுண்ணுயிரிகூட பித்த நீரை அடையலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் பி சி ஆர் என்னும் சிறப்பு பரிசோதனை மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக என்ட்ரோகோகஸ், சூடோமோனாஸ், ஏறுக்கினோசா, பாக்டீராட்ஸ், ஸ்டேப்பிலோகார்க்ஸ், மற்றும் புரோட்டஸ் பொதுவாக காணப்படுகின்றன,

பித்தப்பை கல்லின் பொது வெளிப்பாடுகள்

வயிற்று வலி

பித்தப்பை கல் நோயின் மிக முக்கியமான வெளிப்பாடு வயிற்று வலியாகும். பொதுவாக உணவுக்கு பின் குறிப்பாக கொழுப்புச்சத்து மிகுந்த உணவுக்கு பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி இருக்கும். இந்த வலி விட்டுவிட்டு வருவதோடு சில நொடிகள் அதிகமாகவும் சில நொடிகள் குறைவாகவும் இருக்கும். இவ்வாறு வயிற்றின் மேல் பகுதியில் வரும் வழி வயிற்றின் வலது பக்கத்திற்கும் சில சமயங்களில் முதுகு பக்கத்திற்கும் பரவலாம். இவ்வாறு பரவும் இத்தருணத்தில் மருத்துவர் வயிற்றின் வலது பக்கத்தை அழுத்தும் போது மிக அதிகமாக வலி இருக்கலாம். இதை மார்ஃபிசைன் என்று அழைக்கிறோம் மார்ஃபிசைன் இருந்தால் அந்த நோயாளிக்கு பித்தப்பையில் கல் இருப்பதோடு பித்தப்பையில் நுண்ணுயிரின் தாக்கம் இருப்பதை யூகிக்க முடியும்.

வாந்தி

வயிற்று வலியுடன் கூடிய வாந்தி குறிப்பாக உணவுக்குப் பின் மேல் வயிற்றில் வலி மற்றும் வாந்தி பித்தப்பையில் இருக்கும் கல்லின் வெளிப்பாடாக இருக்கலாம். நடுத்தர வயதில் இருக்கும் பெண்களுக்கு இவ்வாறு இருப்பது பித்தப்பை கல்லின் வெளிப்பாடாக இருக்கலாம். சில சமயங்களில் சுகாதாரமற்ற அல்லது ஒத்து வராத உணவை உண்பதாலும் இவ்வாறு வயிற்று வலியுடன் வாந்தி வரலாம் ஆனால் பித்தப்பை கல் வலி அல்லது ஒத்து வராத உணவு சம்பந்தப்பட்ட வலியான என அறிய வயிற்றுக்கு செய்யப்படும் அல்ட்ராசோனோகிராபி என்ற பரிசோதனை மிகவும் உதவியாக இருக்கும்.

காய்ச்சல்

பித்தப்பையில் இருக்கும் கல் பித்தப்பையின் வாய்பகுதியை அடைந்து பித்தப்பையில் இருந்து பித்த நீர் வெளியேறுவதை தடுக்கும் போது வயிற்றின் மேல் பகுதியில் வலி வருகிறது இந்நிலை சில மணி நேரம் நீடிக்கும் ஆனால் பித்தப்பையில் நுண்ணுயிரின் தாக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் வரும்போது வயிற்று வலியுடன் வாந்தி மற்றும் காய்ச்சல் வரலாம். நுண்ணுயிரியின் தன்மையை பொறுத்து காய்ச்சலின் தாக்கம் மாறுபடலாம். பித்தக் குழாயில் இருக்கும் கல் கூட பித்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி காய்ச்சலை உண்டாக்கலாம். இந்த காய்ச்சலுக்கு காரணம் பித்தப்பை கல்லா அல்லது பித்த குழாய் கல்லா என்பதை பரிசோதனை மூலம் கண்டறியலாம். பித்தப்பை கல்லின் வெளிப்பாட்டில் காய்ச்சல் முதலில் வருவதில்லை வயிற்று வலி மற்றும் வாந்திக்கு பின் சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்து காய்ச்சல் வருவதை காணலாம்.

மஞ்சள் காமாலை

பித்தப்பை கல்லின் ஒரு முக்கியமான வெளிப்பாடு மஞ்சள் காமாலையாக இருக்கலாம். சாதாரணமாக ரத்தத்தில் உள்ள பித்த நிறமியின் அளவு 1.2 மில்லி கிராம் பர்சன்டேஜ் ஆகும். ரத்தத்தில் உள்ள பித்த நிறமியின் அளவு 2 மில்லி கிராம் பர்சண்டேஜ் தாண்டினால் மஞ்சள் காமாலை என்று அழைக்கிறோம் ரத்தத்தில் உள்ள பித்த நிறமியின் அளவு 2.5 மில்லி கிராம் பர்சன்டேஜ் அடையும்போது கண் மஞ்சளாக இருக்கும். 5 மில்லி கிராம் பர்சன்டேஜ் அடையும்போது தோல் பகுதியில் மஞ்சள் நிறம் தெரியலாம்.

அதிக நாடித்துடிப்பு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம்

பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மஞ்சள் காமாலையுடன் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் அதிக நாடித்துடிப்பும் குறைந்த இரத்த அழுத்தமும் இருந்தால் அது பித்த நீரில் ஏற்படும் நுண்ணுயிரியின் தாக்கத்தை காட்டுகிறது மேலும் இவை அனைத்தும் அதிகரித்துக் கொண்டே போகும் நுண்ணுயிரியின் தாக்கத்தை ஓரளவு உறுதிப்படுத்துவதோடு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் காட்டுகின்றன.

மாறுபட்ட உணர்திறன்

தொடர்ந்து ஏற்படும் நுண்ணுயிரியின் தாக்கம் அதிக நாடித்துடிப்பை உருவாக்குவதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன இது மூளைக்குப் போகும் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றது இதனால் நோயாளியின் உணர்திறனில் மாற்றம் ஏற்படுகிறது இந்நிலை மிகவும் துரிதமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

பித்தப்பை அலர்சியின் சம்பந்தப்பட்ட பிற அறிகுறிகள்

பித்தப்பை அல்லது பித்தக் குழாய் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் போது இதில் இருக்கும் தொற்று மற்ற உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன குறிப்பாக இது சிறுநீரகத்தை பாதித்தால் ரத்த சுத்துகிரகிப்பில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாடினின் அளவு அதிகமாகலாம். இந்த நுண்ணுயிரிகள் ரத்தத்தை பாதிக்கும் ஆனால் ரத்தம் உறையும் சக்தியில் மாற்றம் ஏற்படலாம் இன்னும் குறிப்பாக இந்த நுண்ணுயிரிகள் நுரையீரலை பாதித்து ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கலாம். இவ்வாறு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவதற்கு பித்தப்பை மற்றும் பித்தக் குழாயில் உள்ள நுண்ணுயிரின் தாக்கம் தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

பித்தப்பை கற்களை கண்டறிய மருத்துவர் பரிசோதனை

1) வயிற்றில் தொட்டால் வலிக்கும் இடங்கள்

வயிற்றின் வலது புறம் மேல்பகுதியில் சிறு அழுத்தம் கொடுத்தால் வலி இருப்பின் அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களும் அத்துடன் நுண்ணுயிரின் தாக்கமாகும்.

2) வயிற்றில் கட்டி தென்படுதல்

வயிற்று வலியால் அவதிப்படுவோரின் வயிற்றின் மேல் பகுதியில் பரிசோதனையின் போது கட்டி இருப்பது தெரிய வரலாம். இந்த கட்டி மிகுந்த வலியுடன் இருப்பின் அதற்கு ஒரு முக்கியமான காரணம் பித்தப்பையின் நுண்ணுயிரியின் தாக்கமாகும். பித்தப்பையை நுண்ணுயிர்கள் அதிகமாக தாக்கும் போது பித்தப்பை அழுகவோ அல்லது வெடிக்கவோ செய்யலாம். இந்நேரங்களில் பித்தப்பையை சுற்றி இருக்கும் குடல் மற்றும் கொழுப்பு சார்ந்த உறுப்புகள் பித்தப்பையை மூடி மறைப்பதால் அது ஒரு கட்டி போல் கைக்கு தென்படுகின்றது.

3) வயிற்று உள் அலர்ஜி பெரிட்டோனைட்டிஸ்

வயிற்று வலியுடன் வரும் நோயாளியை வயிற்று பரிசோதனை செய்யும் போது தொடும்போது வலி அதிகமாக இருக்கலாம். மற்றும் வயிறு இறுக்கமாக இருக்கலாம். இவ்வாறு இருப்பின் அது பித்தப்பையில் இருக்கும் நுண்ணுயிரிகள் வயிற்றினுள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு முக்கியமான காரணங்கள் குடல் பகுதியில் ஏற்படும் ஓட்டையாகும். குறிப்பாக வயிற்றுப்புண் குடல் கட்டி டைபாய்டு காய்ச்சல் மற்றும் பித்தப்பை அலர்ஜி முக்கியமான காரணங்கள்.

4) உடல் வெப்பநிலை

வயிற்று வலியுடன் வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் உயர்ந்த உடல் வெப்பநிலை பித்தப்பை சார்ந்த உறுப்புக்களில் நுண்ணுயிரியின் தாக்கம் இருப்பதை வெளிப்படுத்துகின்றது.

5 ) மஞ்சள் காமாலை

வயிற்று வலியுடன் வரும் நபருக்கு பித்தப்பை கற்களோடு மஞ்சள் காமாலை இருப்பின் அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்கள் அல்லது தீவிர நுண்ணுயிரியின் தாக்கமாகும்.

6) ரத்த அழுத்தம்

பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவருக்கு சாதாரண ரத்த அழுத்தத்தை விட குறைவாக இருப்பின் அது நுண்ணுயிரியின் தொடர் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

7) நாடித்துடிப்பு

பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவருக்கு சாதாரண நாடித்துடிப்பை விட அதிகமாக இருப்பின் அது தொடர் நுண்ணுயிரியின் தாக்கத்தை உறுதிப்படுத்துவதோடு மற்ற உறுப்புகளின் பாதிப்பு இருக்கலாம் என்பதை உணர வைக்கிறது.

8) நோயாளியின் உணர்திறன்

நோயாளியின் உணர்திறனை கண்டறிதல் மிக முக்கியமாகும். சாதாரணமான நுண்ணுயிரியின் தாக்கத்தின் நோயாளியின் உணர்திறனில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை நோயாளியின் உணர்திறனில் பாதிப்பு ஏற்பட்டால் அது உடலில் உள்ள பல உறுப்புகளின் பாதிப்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கற்கள் மஞ்சள் காமாலை காரணங்கள்

பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவருக்கு மஞ்சள் காமாலை இருக்கும் என்றால் அதற்கு பல காரணங்கள் சொல்லலாம் பித்தப்பையில் இருக்கும் கல் பித்தக் குழாய்க்குள் நழுவி விழுவதால் பித்த குழாய் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை வருவதை மிக முக்கியமான காரணமாகும். இவ்வாறு வரும் மஞ்சள் காமாலையில் வயிற்று வலி வாந்தி மற்றும் குளிர் காய்ச்சல் சேர்ந்து இருக்கலாம் எனவே பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்ட ஒருவர் மஞ்சள் காமாலை மற்றும் குளிர் காய்ச்சலுடன் வந்தால் அதற்கு காரணம் பித்தக்குழாய் கல் ஏற்படுத்தும் பித்த குழாய் அடைப்பு ஆகும். இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை ஏறி இருக்கும் பித்தக் குழாயின் கீழ்ப்பகுதியில் வரும் கல் பித்தக் குழாயும் வாய்ப்பகுதியை அடைகின்றது. இதனால் பித்தக்குழாய் விரிவடைகின்றது விரிவடைந்த பித்தக் குழாயின் கீழ் இருக்கும் கல் விரிவடைந்த பித்தக் குழாயின் மேல் பகுதிக்கு வருகின்றது. எனவே பித்தம் சிறுகுடலில் வலிய ஆரம்பிக்கின்றன. இதனால் மஞ்சள் காமாலை குறைகின்றது. இதுவே பித்த குழாய் கல்லினால் ஏறி இறங்கும் மஞ்சள் காமாலை நோய்க்கு காரணமாகும்.

இரத்த சிதைவு மஞ்சள் காமாலை பித்தப்பையில் கல் உருவாக காரணமாவதோடு மஞ்சள் காமாலை வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது இரத்த சிதைவு மஞ்சள் காமாலையில் அதிக அளவு இரத்த சிவப்பணுக்கள் சிதைகின்றன.

இது இளம் வயதில் அதிகமாக காணப்பட்டாலும் எந்த வயதிலும் வெளிப்படலாம் கன்ஜெனிட்டல் ஸ்பிரோ சைட்டோஸிஸ் மற்றும் சிக்கில் செல் அனிமியா போன்ற வியாதிகள் ரத்த சிதைவு மஞ்சள் காமாலை நோய்க்கு உதாரணங்களாகும். ரத்த சிதைவு மஞ்சள் காமாலை பித்தப்பை கற்களுடன் மஞ்சள் காமாலை வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். பித்தப்பை கல்லுடன் மஞ்சள் காமாலை வருவதற்கு மூன்றாவது முக்கிய காரணம் பித்தப்பையில் ஏற்படும் தீவிர நுண்ணியரின் தாக்கமாகும். பித்தப்பையில் உள்ள கல் பித்தப்பையின் வாய்பகுதியை அடைக்கும் போது பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகரிக்கிறது. இதனால் பித்தப்பையின் மென் சவ்வு பாதிப்பு ஏற்பட்டு பித்தப்பையில் இருக்கும் நுண்ணுயிரிகள் ரத்தத்தோடு கலப்பதோடு பித்தமும் ரத்தத்தோடு கலக்கின்றன. இது மஞ்சள் காமாலை உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இதில் மஞ்சள் காமாலையின் அளவு குறைவாக இருந்தாலும் நோயின் வீரியம் அதிகமாக இருக்கும். பித்தப்பை கற்கள் உள்ளவர்களுக்கு மஞ்சள் காமாலைக்கான வேறு சில காரணங்களும் உள்ளன. இதில் முக்கியமானவை தொடர் மதுப்பழக்கம் மற்றும் வைரஸ்களால் ஏற்படும் கல்லீரல் அலர்ஜி ஆகும். தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மஞ்சள் காமாலை வருவதோடு கல்லீரல் சுருக்கமும் வியாதியும் வருகின்றது இந்நிலையில் பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டால் பித்தப்பை கற்களும் தொடர் மதுப்பழக்கமும் மஞ்சள் காமாலை உருவாக காரணமாகலாம். எனவே மஞ்சள் காமாலையுடன் பித்தப்பை கற்கள் இருந்தால் அதற்கு காரணம் பித்தப்பை கற்களால் அல்லது தொடர் மதுப்பழக்கமா என கண்டறிவது மிகவும் முக்கியம். இத்துடன் வைரசால் ஏற்படும் கல்லீரல் அலர்சியாலும் மஞ்சள் காமாலை வரலாம் வைரசால் வரும் கல்லீரல் அலர்ச்சியில் பசியின்மை குமட்டல் காய்ச்சலுடன் குமட்டல் காய்ச்சலுடன் மஞ்சள் காமாலை வரலாம் வலி இருப்பின் மிதமாகவே இருக்கும். ஆனால் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட மஞ்சள் காமாலையில் மிக அதிகமான வலியுடன் வாந்தி மற்றும் காய்ச்சல் வரலாம் இத்துடன் மஞ்சள் காமாலையும் வரலாம். எனவே பித்தப்பை கற்கள் மற்றும் மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவருக்கு மஞ்சள் காமாலையின் காரணம் பித்தப்பை கற்கலா அல்லது வைரசால் ஏற்படும் கல்லீரல் அலர்ஜியா என வித்தியாசப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு அறுவை சிகிச்சையும் வைரசால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

பித்தப்பை கற்கள் பொதுவான பரிசோதனைகள்

வயிற்று வலியால் வரும் நோயாளிக்கு பித்தப்பை கற்கள் வலிக்கு ஒரு காரணமாகும். எனவே பித்தப்பை கல்லை கண்டுபிடிக்க சில பரிசோதனைகளும் பித்தப்பை கல்லால் வரும் சிக்கல்களை கண்டுபிடிக்க சில பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. சில சமயம் ஒரு நோயாளிக்கு எல்லா பரிசோதனைகளும் தேவைப்படாமல் இருக்கலாம்.

  1. வயிற்று அல்ட்ர சோனோகிராபி மீ ஒலி நோட்டம்

வயிற்று வலியின் போது வயிற்றுக்கு செய்யப்படும் அல்ட்ராசோனோகிராபி என்ற ஸ்கேன் பரிசோதனை மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இந்த பரிசோதனை பித்தப்பை கற்களை உடனடியாக கண்டறிவதோடு எல்லா மருத்துவமனைகளிலும் எப்போதுமே இருக்கும் ஒரு பரிசோதனை ஆகும். இந்த ஸ்கேன் பரிசோதனை எல்லாம் மருத்துவமனைகளிலும் இருப்பதோடு நம்பகத்தன்மையும் குறைந்த செலவும் இதன் முக்கியமான சிறப்பம்சமாகும். பித்தப்பையானது வயிற்றின் வலது புறம் கல்லீரலின் அடிப்பகுதியில் வயிற்று தசைகளை தாண்டி வயிற்றினில் மேலோட்டமாக இருக்கும், ஒரு உறுப்பு ஆகும். வயிற்று தசைகளுக்கும் பித்தப்பைக்கும் இடையே வேறு எந்த உறுப்புக்களும் குறிப்பாக வாயு நிரம்பிய குடல் பகுதி இருப்பதில்லை எனவே அல்ட்ராசோனோகிராபி என்ற ஸ்கேன் பரிசோதனை பித்தப்பை கற்களை எளிதாக கண்டுபிடிக்கின்றன இன்னும் குறிப்பாக உணவும் ஏதும் உண்ணாமல் இருக்கும் சமயத்தில் பித்தப்பையில் பித்தம் முழுமையாக தேங்கி இருக்கும் இத்தருணத்தில் செய்யும் ஸ்கேன் பரிசோதனை பித்தப்பை கற்களை இன்னும் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. பித்தப்பையில் தேங்கி இருக்கும் திரவம் அல்ட்ரா சவுண்ட் அலைகளை இலகுவாக ஊடுருவ செய்கின்றன.

பொதுவாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் போது பித்தப்பையானது நீர் நிரம்பிய பை போல் காட்சியளிக்கும் அதற்குள் எந்த திடப்பொருட்களின் அறிகுறிகளோ அல்லது பிம்பங்களோ தெரிவதில்லை, பித்தப்பையில் கற்கள் இருக்கும் பட்சத்தில் அவைகள், திடப்பொருட்கள் போல காட்சியளிக்கும். அத்துடன், கற்களுக்கு பின்னால் கற்களின் பின் பிம்பங்கள் தெரியும் கற்களின் பின் பிம்பங்கள் தெரிவது பித்தப்பையில் கற்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த தருணத்தில் நோயாளியின் படுக்கும் நிலையை மாற்றினால் பித்தப்பையில் இருக்கும் திடப்பொருளின் நிலையும் மாறும் இந்த அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆனது பித்தப்பை கற்களை கண்டுபிடிப்பதோடு பித்தப்பை சுவரில் ஏற்படும் மாற்றம் பித்தப்பை சுற்றி இருக்கும் நீர் தொகுப்பு மற்றும் பித்தப்பையில் ஏற்படும் ஓட்டையும் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் பித்தப்பை சுவரில் கால்சியம் அதிகமாக பதிவாகி இருக்கும் இதை போர்சலின் பித்தப்பை என கூறப்படுகிறது. இதையும் அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை கண்டுபிடிக்கிறது. அல்ட்ராசோனோகிராபி பரிசோதனை மூலம் பித்தப்பை கற்களை கண்டுபிடிப்பதில் சில சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, பித்தப்பையில் உருவாகும் சதை வளர்ச்சியும் பித்தப்பை ஸ்கேன் பரிசோதனையில் ஒரே மாதிரியாக தெரியும் இத்தருணத்தில் படுத்து இருக்கும் நோயாளியின் நிலையை மாற்றினால் பித்தப்பை கற்கள் நகரும் தன்மை உடையவை, ஆனால் பித்தப்பை சதை வளர்ச்சிக்கு நகரும் தன்மை கிடையாது அத்துடன் பித்தப்பை கற்களுக்கு பின் பிம்பங்கள் இருக்கும் பித்தப்பை சதை வளர்ச்சிக்கு பின் பிம்பங்கள் இருப்பதில்லை இதன் மூலம் பித்தப்பையில் இருக்கும் திடப்பொருள் பித்தப்பை கல்லா அல்லது பித்தப்பை சதை வளர்ச்சியா என ஓரளவு யூகிக்க முடியும்.

இத்துடன் பித்த குழாயில் கல் இருக்கிறதா? இல்லையா என்பதை அல்ட்ராசோனோகிராபி மூலம் ஓரளவு கண்டறிய முடியும் குறிப்பாக பித்த குழாயில் இருக்கும் கல் பித்த குழாயை அடைந்து பித்த நீர் வடிதலை தடுக்கின்றது இதனால் பித்தக் குழாயில் வீக்கம் ஏற்படுகிறது கல்லீரலின் வெளிப்புறம் உள்ள பித்த குழாயில் ஏற்படும் வீக்கம் கல்லீரலின் உள்ளே உள்ள பித்த குழாயையும் பாதிக்கின்றது கல்லீரலின் உள்ளே உள்ள பித்தக் குழாயும் வீக்கத்தை அல்ட்ராசோனோகிராபி பரிசோதனை எளிதாக கண்டறிந்து விடும் எனவே கல்லீரலின் உள்ளே உள்ள பித்த குழாயின் வீக்கம் கல்லீரலின் வெளியே உள்ள பித்த குழாயின் அடைப்பை உறுதி செய்கின்றது. இந்த அடைப்புக்கு முக்கிய காரணம் பித்த குழாய் கற்கள் திட்ட குழாய் சுருக்கம் மற்றும் பித்த குழாயில் ஏற்படும் புற்று வியாதிகள் ஆகும்.

ரத்தப் பரிசோதனைகள்

ரத்த வெள்ளையனு எண்ணிக்கை

பொதுவாக உடலில் எந்த நுண்ணுயிரியின் தாக்கம் ஏற்பட்டாலும் இரத்த வெள்ளை அணுக்களின் தாக்கம் அதிகமாகின்றது. வயிற்று வலி மற்றும் வாந்தியுடன் வருவோருக்கு ஸ்கேன் பரிசோதனையில் பித்தப்பை கற்கள் இருப்பதோடு இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமானால் அதற்கு காரணம் பித்தப்பை கல்லால் ஏற்படும் பித்தப்பை அலர்ஜி என எடுத்துக் கொள்ளலாம்.

கல்லீரல் செயல்திறன் பரிசோதனை

கல்லீரல் செயல்திறன் பரிசோதனையில் பல ரத்த பரிசோதனை அடங்கும் குறிப்பாக இரத்தத்தில் உள்ள   பிலிரூபின்,   எஸ் ஜி டி,  எஸ் ஜி பிடி, ஜி டி பி, எஸ் பி மற்றும் ரத்தத்தில் உள்ள புரோட்டீன்களான ஆல்புமின் குளோபலின்களும் அடங்கும் மற்றும் உடலில் ரத்தம் உறைதலை கட்டுப்படுத்துவது கல்லீரல் ஆகும். கல்லீரல் பாதிக்கப்பட்டால் ரத்தம் உறையும் சக்தியும் பாதிக்கப்படும் புரோமித்ரன் என்ற தலைமுடன் ஐ என் ஆர் என்ற பரிசோதனை ரத்தம் உறையும் சக்தியை கண்டுபிடிப்பதோடு, கல்லீரலின் செயல்திறனையும் காட்டுகின்றது. பித்தப்பை கல்லுடன் பித்த குழாயில் கல் இருந்தாலும் அல்லது கல்லீரல் அலர்ஜி ஏற்பட்டாலோ இந்த கல்லீரல் செயல்திறன் பரிசோதனையில் மாற்றங்கள் இருக்கும்,

  1. சீரம் பிலிரூபின்

சீரம் பிலிரூபின் என்னும் பித்த நிறம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் அதிகமாக காணப்படலாம். குறிப்பாக கல்லீரல் அலர்ச்சி பித்தக் குழாய் கற்கள் இரத்த சிதைவு மஞ்சள் காமாலை மற்றும் அழுகிய நிலையில் இருக்கும் பித்தப்பை அலர்ஜி போன்ற வியாதிகள், குறிப்பிடத்தக்கவை. சில சமயங்களில் மஞ்சள் காமாலை கூறிய காரணத்தை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருக்கலாம். ரத்தப் பரிசோதனையின் போது ரத்தத்தில் கல்லீரல் சம்பந்தப்பட்ட மற்ற நொதிகள் அதிகமாக இருந்தால் அதற்கு காரணம் கல்லீரல் அலர்ஜியாக இருக்கலாம். இளம் வயதில் பித்தப்பை கல்லோடு மஞ்சள் காமாலை இருந்தால் அதற்கு முக்கியமான காரணம் ரத்த சிதைவு மஞ்சள் காமாலை என்பதால் அதன் சம்பந்தமான பரிசோதனைகள் செய்வது மிகவும் முக்கியம்.

  1. எஸ் ஜி டி

இது ஒரு கல்லீரல் சம்பந்தமான நொதியாகும். எப்போதெல்லாம் கல்லீரல் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இரத்தத்தில் இதன் அளவு அதிகமாக இருக்கும் வைரசால் ஏற்படும். கல்லீரல் அலர்ச்சி தொடர் மதுப்பழக்கம் சில மருந்துகள் மற்றும் சில நச்சுக்களும் இதனால அளவை ரத்தத்தில் அதிகரிக்கின்றன.

  1. எஸ் ஜி பி டி

இந்த நொடியும் கல்லீரலில் ஏற்படும் அலர்ஜி காரணமாக அதிகரிக்கின்றன.

  1. ஜி ஜி டி

இது ஒரு முக்கியமான நொதியாக கருதப்படுகிறது. ஏனெனில் பித்த குழாய் அடைப்பு மற்றும் மருந்து மாத்திரைகள் அல்லது தொடர் மது பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பின் போது இரத்தத்தின் இதன் அளவு அதிகமாகிறது. பித்தக் குழாய் அடைப்பு ஏற்படும்போது மஞ்சள் காமாலை வருவதற்கு முன்பாகவே இதன் அளவு இரத்தத்தில் அதிகரிக்கின்றது. அதேபோல தொடர் மது பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்படும் போது இரத்தத்தில் ஜி ஜி டீ  யின்  அளவு மற்ற  நொதிகள் அதிகரிப்பதற்கு முன்பாகவே அதிகரிக்கிறது. இது போலவே கல்லீரல் அலர்ஜியில் இருந்து குணமடைபவர்களுக்கு ஜி ஜி டி யின் அளவு ரத்தத்தில் அதிகரித்து பின் குறைகின்றது. குறிப்பாக பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தக் கல்லீரல் செயல் பரிசோதனை செய்யும்போது அதற்கு காரணம் பித்தக் குழாய் கற்களாக இருக்கலாம், என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கலாம்.

  1. எஸ் பி

இரத்தத்தில் ஜி ஜி டி பி இன் அளவு அதிகரிக்கும் போது எஸ் ஏ பி என் அளவு அதிகரிக்கலாம். அத்துடன், எலும்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் ரத்தத்தில் இதன் அளவு அதிகரிக்கலாம். எனவே ரத்த பரிசோதனையில் எஸ் ஏ பி என் அளவு அதிகமாக இருந்தால் பித்தக் குழாயில் அடைப்பு இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ரத்த ப்ரோட்டீன்கள்

இரத்தத்தில் ஆல்புமின் மற்றும் குளோபுளின் என்ற புரோட்டீன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக ஆல்புமின் என்னும் புரோட்டின் கல்லீரலில் மட்டுமே உற்பத்தி ஆவதாகும். எனவே, இதன் அளவு இரத்தத்தில் குறையும் ஆனால் அதற்கு காரணம் கல்லீரல் பாதிப்பு என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குளோபுளின் என்ற புரோட்டின் கல்லீரலும் எலும்பு மச்சையிலும் உற்பத்தியாகிறது. எனவே, தொடர் கல்லீரல் அலர்ஜின் போது ஆல்புமின் அளவு குறைவதோடு குளோபுலின் அளவு அதிகமாக காணப்படலாம்.

  1. இரத்த அமோனியா

அமோனியா என்பது உடலில் நடக்கும் வளர்ச்சிதை மாற்றத்தால் உருவாகும் ஒரு மூலக்கூராகும். இதை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கல்லீரலில் அலர்ஜியால் கல்லீரலில் பாதிக்கப்படும் போது இரத்தத்தில் உள்ள அமோனியாவை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ரத்தத்தில் அம்மோனியாவின் அளவு அதிகரிக்கின்றது. இரத்தத்தில் அம்மோனியாவின் அளவு அதிகமானால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கல்லீரல் செயல் திறன் குறைவாக உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம். ரத்தத்தில் அமோனியாவின் அளவு அதிகமாக இருக்கும் போது அறுவை சிகிச்சை சம்பந்தமான வைத்தியத்தில் ஆபத்துகள் அதிகமாக இருக்கலாம்.

  1. இரத்த அமைலேஷ் மற்றும் லைப் பேஸ்

கணைய அலர்சியின் போது கணைய சம்பந்தமான நொதிகளான அமைலேஸ் மற்றும் லைப்பேசின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கின்றது. கணைய பாதிப்பிற்கு முக்கியமான காரணங்கள் மதுப்பழக்கம் மற்றும் பித்தப்பை கற்கள் ஆகும் பித்தப்பையில் இருக்கும் கல் பித்த குழாய்க்கு வந்து பித்த குழாயும் கணைய குழாயும் சேரும் இடத்தை அடைக்கும் ஆனால் கணைய அலர்ஜி உருவாகின்றது. எனவே பித்தப்பை கல்லால் வரும் கணைய அலர்ச்சியில் இரத்தத்தில் அமைலேஸ் மற்றும் லைப்பேஸ் அளவு அதிகரிப்பதோடு இரத்த கல்லீரல் செயல் திறன் பரிசோதனைகளும் மாற்றங்கள் இருக்கும்.

 iii ) வயிற்று எக்ஸ்-ரே பரிசோதனை

பொதுவாக எக்ஸ்ரே பரிசோதனையில் பித்தப்பை கற்களை காண்பது அரிது ஏனெனில் 10 சதவீதத்திற்கும் குறைவான பித்தப்பை கற்களை எக்ஸ்ரே வாயிலாக தெரியும். ஆனால் வயிற்று வலியோடு வரும்போது வயிற்றிற்கான எக்ஸ்ரே பரிசோதனையும் மிக முக்கியம். ஏனெனில் திடீர் வயிற்று வலிக்கு முக்கிய காரணங்களான குடலில் ஓட்டை மற்றும் குடல் அடைப்பு போன்ற வியாதிகளை எக்ஸ்ரே பரிசோதனை மூலமாகத்தான் கண்டுபிடிக்க முடியும்.

 iv ) சி டி ஸ்கேன்

திடீர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிசோதனை சில சமயங்களில் மிகவும் முக்கியமானதாக அமையும் சி டி ஸ்கேன் பித்தப்பை கற்களை கண்டுபிடிப்பதோடு பித்தப்பையில் ஏற்படும் ரணம் பித்தப்பையில் ஏற்படும் ஓட்டை மற்றும் பித்தப்பையை சுற்றி இருக்கும் நீர் கட்டையும் கண்டுபிடித்துவிடும். மேலும், கணையஅலர்ஜி இருப்பதையும் இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். கணைய குழாயில் இருக்கும் கற்களையும் ஓரளவு கண்டுபிடித்து விடும்.

கல்லீரலின் உள் மற்றும் வெளியில் உள்ள பித்த குழாய்களின் வீக்கம் பித்த குழாய்க்குள் இருக்கும் திடப்பொருட்கள் பித்தப்பை கல்லினால் பித்த குழாய் அடைபட்டுள்ளது என்பதை உறுதி செய்கின்றன சில சமயங்களில் பித்தப்பையில் கல் இல்லாமலே பித்தப்பை அலர்ஜி உண்டாகிறது. குறிப்பாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு பித்தப்பை கல் இல்லாத பித்தப்பை அலர்ச்சி வருகின்றது. இதை சி டி ஸ்கேன் மூலமாக கண்டுபிடித்து விடலாம். இத்துடன் வயிற்றில் ஏற்படும் வேறு வியாதிகளான கல்லீரலில் ஏற்படும் கட்டி கணையத்தில் ஏற்படும் கட்டி உடலில் ஓட்டை மற்றும் குடல் அடைப்பு போன்ற வியாதிகளை கண்டுபிடிக்கவும் இந்த சி டி ஸ்கேன் உதவுகின்றது சில சமயம் வயிற்று வலியால் வருபவர்க்கு பித்தப்பையில் கல் இருந்தாலும் வயிற்று வலிக்கு காரணம் பித்தப்பை கற்கலா அல்லது வேறு காரணமா என்பதை கண்டுபிடிக்க சி டி ஸ்கேன் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

  1. v) எம் ஆர் சி பி

பித்த குழாய் மற்றும் கணைய குழாயை தெரிந்து கொள்வதற்கு எம் ஆர் சி பி என்னும் எம் ஆர் ஐ பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எம் ஆர் சி பி இல் பித்தக் குழாய் கற்கள் பித்தக்குழாய் அடைப்பு பித்தக் குழாய் சுருக்கம் மற்றும் பித்த குழாய் கட்டி போன்றவற்றை கண்டுபிடித்து விடலாம். பித்தகுழாய் கற்களால் அடைப்பு ஏற்படும்போது பித்த குழாயில் உள்ள கல்லின் எண்ணிக்கை பித்தக் குழாய் கல்லின் அளவு மற்றும் அடைப்பு ஏற்பட்டு இருக்கும் இடத்தையும் ஓரளவு துல்லியமாக கண்டுபிடித்து விடும். இந்த தகவல்கள் அடுத்து செயப்படும் சிகிச்சை முறைக்கும் மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் கணைய பாதிப்பு இருப்பின் பாதிப்பிற்கான காரணம் கணைய குழாயின் அளவு கணைய குழாய் சுருக்கம் மற்றும் கணைய குழாய் வீக்கம் போன்றவற்றையும் கண்டுபிடித்து விடும்.

  1. vi) பி டி சி

பி டி சி என்னும் பரிசோதனை குறிப்பாக பித்த குழாயை பற்றி தெரிந்து கொள்ள உதவுவது ஆகும். ஒரு நீண்ட ஊசியை அல்ட்ரா சவுண்ட் உதவியோடு பித்த குழாய்க்குள் செலுத்தப்படுகின்றன, பித்த குழாயை அடையும் ஊசியின் உதவியால் வடிக்குழாய்களை பித்த குழாய்க்குள் செலுத்தி சிறப்பு எக்ஸ்ரே பரிசோதனை மூலம் பித்த குழாய்களின் தன்மையை கண்டறியலாம். இந்த பரிசோதனையில் பித்தக் குழாயின் அடைப்பு பித்த குழாயின் சுருக்கம் மற்றும் பித்தக் குழாயின் கற்கள் போன்றவற்றை கண்டறியலாம். இந்த பரிசோதனை முந்தைய காலங்களில் பயன்படுத்தியது போல இப்போது அதிகமாக பயன்படுத்துவது இல்லை, அதற்கு காரணம் பி டி  சி யே பரிசோதனையில் கிடைக்கும் எல்லா தகவல்களையும் எம் ஆர் சி பி பரிசோதனையே கொடுத்து விடுகின்றது, ஆனால் சில சமயங்களில் இரைப்பை அறுவை சிகிச்சைக்கு பின் பித்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை இ ஆர் சி பி என்ற எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் சரிப்படுத்த இயலாது இத்தருணத்தில், இ ஆர் சி பி சிகிச்சைக்கு பதிலாக பி டி சி மூலம் பித்தக் குழாயில் வடிக்குழாயை பொருத்தலாம். மேலும் சில சமயங்களில் பித்தக் குழாயில் ஏற்படும் அடைப்பால் நோயாளியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எந்தவிதமான அறுவை சிகிச்சையோ அல்லது இ ஆர் சி பி முறையில் வடிகால் வைக்க முடியாமல் போகலாம் இத்தருணத்தில் பி டி சி மூலமாக பித்தக்குழாயில் வடிகாலை பொருத்தலாம் இவ்வாறு பொருத்தும் வடிகால் பித்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை தற்காலிகமாக நீக்குவதால் நோயாளியின் மஞ்சள் காமாலை குறைவதோடு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட பின்பு தேவையான அறுவை சிகிச்சை செய்வதற்கு இந்த பி டி சி மூலமாக வைக்கும் வடிகால் மிகவும் உதவியாக இருக்கும்.

Vii )எண்டோஸ்கோபி அல்ட்ரா சவுண்ட்

எண்டோஸ்கோபி அல்ட்ரா சவுண்ட் என்பது இரைப்பை உள்நோக்கியுடனோ சேர்ந்திருக்கும் ஒரு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகும். இப்ப பரிசோதனையில் இரைப்பை உள்நோக்கியின் மூலம் இரைப்பை மற்றும் முன்சிறகு உடலை பார்ப்பதோடு அதனுடன் இணைந்து இருக்கும் அல்ட்ரா சவுண்ட் கருவியின் மூலமாக பக்கத்தில் இருக்கும் பித்த குழாய் மற்றும் கணையத்தை பார்க்க முடியும். இப்பரிசோதனையின் மூலம் பித்த குழாய் கற்கள் பித்த குழாய் சுருக்கம், மற்றும் பித்தக் குழாய் கட்டியை கண்டுபிடிப்பதோடு தேவைப்பட்டால் அதிலிருந்து சதை பரிசோதனை செய்யவும் உதவுகின்றது. பித்த குழாயிலோ பித்த குழாயின் கீழ் பகுதியிலோ கட்டி இருந்தால் கட்டியின் அளவு அது பரவி இருக்கும் இடம் மற்றும் பக்கத்து உறுப்புக்களில் ஒட்டி இருக்கின்றதா என அறியவும் இது உதவுகின்றது. மேலும் கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கண்டறியவும் உதவுகின்றது. குறிப்பாக கணைய அலர்ஜி கணைய பாதிப்பு மற்றும் கணையத்தை சுற்றி இருக்கும் நீர் கட்டியை கண்டுபிடிக்கவும் உதவுகின்றது. சில சமயங்களில் கணையத்தை சுற்றி இருக்கும் நீர் கட்டியை எண்டோ அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமாகவே வடிகாலை பொருத்தி நீர் கட்டியை சரிப்படுத்தலாம்.

viii) ஐ சி பரிசோதனை

இந்த பரிசோதனை பித்தக்குழாய் சம்பந்தப்பட்ட விவரங்களை கண்டறிய உதவும் ஒரு பரிசோதனை ஆகும். இப்ப பரிசோதனை பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது செய்யப்படுகின்றது பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்த குழாயில் உள்ள கற்களை கண்டறியவும் பித்தக் குழாயின் மாற்று அமைப்புகளை கண்டறியவும் இது உதவுகின்றது. பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையின் வாய்பகுதியாக பித்த குழாய்க்கு ஒரு சிறு குழாய் செலுத்தப்படுகின்றது. இந்த குழாயின் வழியாக கதிர் மாறுபாடு ஊடகம் என்னும் திரவம் செலுத்தி தொடர் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. இப்ப பரிசோதனையில் பித்தக் குழாய் சம்பந்தமான விவரங்கள் பித்த குழாய் சுருக்கம் மற்றும் பித்த குழாய் கற்கள் கண்டறியப்படுகின்றன அத்துடன் பித்த குழாயின் அமைப்பில் உள்ள மாறுதல்களையும் கண்டறியலாம் தற்போது எம் ஆர் சி பி மற்றும் ஆர் சி பி இருப்பதால் சி முறை அதிகமாக பயன்படுவதில்லை.

  1. ix) கிடா ஸ்கேன்

பித்த நாளம் சின்டிகிராவி என்பது கிடா ஸ்கேன் என்பதின் மறு பெயர் ஆகும். இப்ப பரிசோதனையில் கதிரியக்க மருந்துகள் மூலம் பித்தக் குழாய் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இப்ப பரிசோதனையில் இமினோடைஅசிட்டிக்அசிட் என்னும் கதிரியக்க மருந்து செலுத்தப்படுகின்றது. இந்த மருந்து செலுத்தப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கல்லீரலில் இருந்து பித்த நீர் வழியாக பித்த குழாய்க்கு வருகின்றன. இம்மருந்தில் இருக்கும் கதிரியக்க பண்பை பயன்படுத்தி பித்தநீர் உற்பத்தி பித்த நீர் வழிதல் மற்றும் பித்தக் குழாயின் தன்மையை கண்டறிய முடியும் அத்துடன் பித்தப்பையின் வாய்பகுதியில் அடைப்பு இருந்தால் குறிப்பாக திடீர் பித்தப்பை அலர்ச்சியில் பித்தப்பையின் வாய்பகுதியை பித்தப்பை கற்கள் அடைகின்றன. இத்தருணத்தில் கதிரியக்க தன்மை கொண்ட பித்த நீர் பித்தப்பைக்கே வராத போது பித்தப்பை கல்லால் திடீர் பித்தப்பை அலர்ஜி உருவாகி இருக்கின்றது என எடுத்துக்கொள்ளலாம். அத்துடன், பித்தப்பையின் அறுவை சிகிச்சைக்கு பின் பித்தக் குழாய் சம்பந்தப்பட்ட இடங்களில் ஏற்படும் பித்த நீர் கசிவையும் கண்டறியலாம். சில நோயாளிகளுக்கு உணவுக்கு பின் வயிற்று வலி மற்றும் அஜீரணம் ஏற்படலாம். அதற்கு காரணம், பித்தப்பையில் ஏற்படும் குறைந்த அசைவு ஆகும். எனவே இந்த குறிப்பிட்ட வியாதியையும் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

  1. x) பி டி ஸ்கேன்

இந்த பரிசோதனை உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிதை மாற்றத்தை பொறுத்து ஏற்படும் மாற்றங்களை கண்டறிய உதவுகிறது. குறிப்பாக சாதாரணமான திசுக்களையும் புற்றுவாய் சம்பந்தப்பட்ட வியாதிகளையும் வித்தியாசப்படுத்தும் இது அதிகமாக செய்யப்படும் பரிசோதனை ஆக இல்லாமல் இருந்தால் கூட மிக முக்கியமான பரிசோதனை ஆகும் இப்ப பரிசோதனை ஆனது பித்தப்பை கல்லுடன் பித்தப்பையில் புற்று வியாதி இருப்பதாக சந்தேகப்பட்டால் அதை உறுதி செய்ய பயன்படுகிறது. ஏனெனில் பித்தப்பை கல்லுக்கும் பித்தப்பை புற்று வியாதிக்கும் செய்யப்படும் அறுவை சிகிச்சையில் சில வித்தியாசங்கள் உள்ளன இப்ப பரிசோதனையில் எப் டி ஜி என்னும் மருந்து செலுத்தப்பட்டு அம்மா மருந்தை திசுக்களின் வளர்ச்சிதை மாற்றத்தை பொறுத்து திசுக்களின் எடுத்துக் கொள்ளும் தன்மை மாறுகிறது. புற்று வியாதி இருந்தால் எடுத்துக் கொள்ளும் தன்மை அதிகமாகவும் புற்று வியாதி இல்லாத பட்சத்தில் எடுத்துக் கொள்ளும் தன்மை குறைவாகவும் உள்ளன இப்ப பரிசோதனை எல்லா இடத்திலும் இல்லாமல் இருப்பதும் அதிக செலவாகும் இதை பயன் படுத்துவதற்கான தடைகளாகும்.

xi)இரைப்பை உள்நோக்கி (எண்டோஸ்கோபி)

குடல் இரைப்பை உள்நோக்கியின் மூலம் உணவுக் குழாய் இரைப்பை மற்றும் முன் சிறு குடலை பார்க்கலாம். வயிற்று வலிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முன் சிறு குடல் புண் ஆகும் சில சமயங்களில் வயிற்று வலிக்கு காரணம் முன் சிறு குடல் புண்ணா அல்லது பித்தப்பை கற்கலா என கண்டறிவது சிரமம். இத்தருணத்தில், இரைப்பை உள்நோக்கியின் மூலம் முன் சிறு குடலில் புண் இருப்பதை அல்லது இல்லாததை உறுதி செய்யலாம். இதன் மூலம் பித்தப்பையில் கல் இருக்கும் போது முன் சிறு குடலில் புண் இல்லாமல் இருந்தால் பித்தப்பை அறுவை சிகிச்சை தேவை என்பது உறுதியாகிறது.

7) பித்தப்பை கற்கள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள்

பொதுவாக வயிற்று வலியுடன் வரும் நோயாளிக்கு வலிக்கு காரணமான நோயை கண்டுபிடிக்க பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்ப பரிசோதனைகளில் பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சை முறை அறுவை சிகிச்சை என்பதால் அறுவை சிகிச்சைக்கு தகுதி உடையவராக இருக்கிறாரா என்று பார்க்க கீழே வரும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

 

இரத்த பரிசோதனைகள்

1) ஹீமோகுளோபின்

2) நிரம்பிய செல் அளவு

3) இரத்த கசிவு நேரம்

4) இரத்தம் உறையும் நேரம்

5) புரோத்திரோமின் நேரம்

6) ஐ என் ஆர்

7) இரத்த சர்க்கரை

8) இரத்த யூரியா

9) இரத்த கிரியாடினைன்

10) இரத்த வகை

11) இரத்த ஹெச் பி என் சி - சர்க்கரை நோயாளிகளுக்கு

12) தைராய்டு ஹார்மோன்களின் அளவு- தைராய்டு சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு

13) வைரல் பரிசோதனைகள் குறிப்பாக கல்லீரல் அலர்ஜி சம்பந்தமான டி மற்றும் சி வைரஸ் ஹெச் ஐ வி வைரஸ்

14) மார்பு எக்ஸ்ரே

15) இ சி ஜி

16) எக்கோ பரிசோதனை- இதய வியாதி சந்தேகப்படுபவர்களுக்கு

17) சிறப்பு நிபுணர் கருத்து

18) இதய சிகிச்சை நிபுணர்- இருதய வியாதி 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு

19)நீரிழிவு நோய் நிபுணர் -சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு

20) மார்பக நோய் நிபுணர்- நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு

21) சிறுநீரக நிபுணர்- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு

22) நரம்பியல் நிபுணர்- நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு

23)இரத்த சிகிச்சை நிபுணர்- இரத்த சிதைவு மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு

மேற்கண்ட பரிசோதனைகளுக்கு பின் நோயாளியை மயக்க மருந்து நிபுணரின் மதிப்பீட்டிற்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். இத்தருணத்தில் மயக்க மருந்து நிபுணர் நோயாளியுடன் தேவையான தகவல்களை பெற்று மயக்க மருந்து மதிப்பீடு செய்வார் இதில் குறிப்பாக நோயாளிக்கு இருக்கும் மற்ற வியாதிகள் பற்றி விரிவாக ஆராயப்படும். குறிப்பாக, இருதய நோய் அல்லது நீரழிவு நோய் போன்றவைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றதா என்பதை கண்டறிதல் மிகவும் முக்கியம். அத்துடன் கடந்த காலங்களில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதா எப்போதாவது மயக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளதா என்பதை பற்றி அறிவது முக்கியம். இத்துடன் மயக்க மருந்து கொடுப்பதற்கு தொண்டை பகுதி நன்றாக இருக்கிறதா மற்றும் பொதுவான உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்வது முக்கியம், சில சமயங்களில் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகமாய் இருந்து பொது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் மயக்க மருந்து கொடுப்பதில் சிக்கல்கள் இருப்பதை நோயாளியுடன் வருபவருக்கு தெரியப்படுத்துவது முக்கியம்.

 


No Comments posted
Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Add Comment *

Name*

Email*