
கணைய அழற்சி லேப்ராஸ்கோபிக் அழுகிய கணையம் அகற்றுதல்
திடீர் கணைய அழற்சிக்கு பின் பெரும்பாலும் கணையம் சிகிச்சைக்கு பின் குணமடைகிறது. சில சமயம் கணைய அழற்சியின் வீரியம் அதிகமாக இருந்தால் கணையத்தின் ஒரு பகுதி அழுக வாய்ப்புள்ளது. குறிப்பாக பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணைய அழற்சிக்கு பின் கூட கணையம் அழுகலாம். இத்துடன் நுண்ணுயிரியின் தாக்கம் ஏற்படும் போது நுண்ணுயிரி உடல் முழுக்க பரவி மற்ற உறுப்புகளையும் பாதிக்கலாம்.
இத்தருணத்தில், லேப்ராஸ்கோபி மூலம் அழுகிய கணையம், அகற்றப்படும் போது நுண்ணுயிரியின் தாக்கம் குறைந்து பாதிக்கப்பட்ட உறுப்புக்களும் குணமடைய வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு சிறுநீரக அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும் என்பதால் சம்பந்தப்பட்ட மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்னரே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அழுகிய கணையத்தின் அளவை மாறுபடும் திரவம் செலுத்தி செய்யப்பட்ட சிடி பரிசோதனை உறுதிப்படுத்துகின்றது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும் போது மயக்க மருந்துவரின் ஒப்புதல்கள் மிக முக்கியமாகும். பொதுவாக பொது மயக்கத்தில் மூன்று அல்லது நான்கு துவாரங்கள் வழியாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சாவி துவாரம் வழியாக லேப்ராஸ்கோப்பி வயிற்றினுள் செலுத்தப்பட்டு கணையம் அழுகி இருப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. பொதுவாக கணையம் இரைப்பைக்கும் மலக்குடலுக்கும் இடை பாகத்தில் இருக்கும். எனவே அழுகிய கணையமும் அங்கேயே இருக்கும். இரைப்பைக்கும், மலக்குடலுக்கும் இடையே உள்ள சதைப்பகுதி பிரிக்கப்பட்டு அழுகிய கணையத்தை அதன் கருப்பு நிற தோற்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இரத்த ஓட்டம் இல்லாத அழுகிய கணையம் கருப்பு நிறமாக காட்சியளிக்கும். இதை லேப்ராஸ்கோப்பி மூலம் துல்லியமாக கண்டறிந்து பாதிக்கப்பட்ட அழுகிய கணையம் மட்டும் அகற்றப்படுகிறது. குறிப்பாக ரத்தக்கசிவு இல்லாத அழுகிய கணையம் மட்டுமே அகற்றப்பட வேண்டும். ரத்த கசிவு ஏற்பட்டால் அத்துடன் அறுவை சிகிச்சை முடிவு பெறும். இதற்கு பின் சுத்தமான நீரால் மீதி இருக்கும் கணையம் சுத்தப்படுத்தப்பட்டு ஒன்று அல்லது இரண்டு வடிகால்கள் பொருத்தி அறுவை சிகிச்சை நிறைவு பெறுகிறது. சில சமயம் உறுப்புகளை பிரித்து கண்டறிவதில் சிரமம் இருந்தால் லேப்ராஸ்கோபிக் முறையை தவிர்த்து திறந்த அறுவை சிகிச்சை மூலம் அழுகிய கணையம், அகற்றப்பட வேண்டும்.
Your email address will not be published. Required fields are marked *